இறகுப் பந்து போட்டிகள் ரத்து

புதுச்சேரி இறகுப் பந்து சங்கத்தின் 36-ஆவது மாநில இறகுப் பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ.அரவிந்தன் தெரிவித்தார்.

புதுச்சேரி இறகுப் பந்து சங்கத்தின் 36-ஆவது மாநில இறகுப் பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ.அரவிந்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகில இந்திய இறகுப் பந்து கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதுச்சேரி இறகுப் பந்து சங்கம், எனது தலைமையின் கீழ் புதுச்சேரியில் இயங்கி வருகிறது.
புதுச்சேரி இறகுப் பந்து சங்கத்தால், ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக நீக்கப்பட்ட சிலர், தற்போது நடைபெறவிருந்த 36-ஆவது மாநில இறகுப் பந்து போட்டிகளை நடத்தவிடாமல் நெருக்கடிகள் கொடுத்து தடுத்துள்ளனர்.
தங்களுக்கு அங்கீகாரம் வேண்டி பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவோரின் செயல்பாடுகளைக் களைந்து இறகுப் பந்து வீரர்கள், பொதுமக்களின் குழப்பத்தை நீக்க சங்க நிர்வாகிகள் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து விளக்கம் அளித்தோம்.
புதுச்சேரியின் மூத்த காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தோம். எங்களுடைய வாதங்களை முழுமையாக கேட்ட அவர் எங்களுக்கே முழு அதிகாரம் இருப்பதாகக் கூறினார்.
ஆவணங்களைக் காட்டிய பின்னரும் மாநில இறகுப் பந்து போட்டிகளை நடத்த விடாமல் தாமதப்படுத்தி, குறுக்கு வழியில் அங்கீகாரம் கோருவோரின் வாதங்களை வைத்து, தற்போது போட்டிகள் நடந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாகக் கூறி, மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் போட்டிகளை நடத்தத் தடை விதித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
புதுச்சேரி மாநில இறகுப் பந்து போட்டிகளுக்காக சுமார் 490 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது விதிக்கப்பட்ட தடை உத்தரவால் ஓராண்டு முழுவதும் தங்களைத் தயார்படுத்தி வந்த விளையாட்டு வீரர்களின் கனவு கலைக்கப்பட்டுள்ளது.
இதனால், வீரர்களும், அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தென் மாநில இறகுப் பந்து போட்டிகள் வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் நாராயணசாமி இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக போட்டிகளை நடத்த ஆவன செய்ய வேண்டும் என, வீரர்கள், பெற்றோர்கள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அரவிந்தன் தெரிவித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com