தேசிய செயல்திட்ட மாதிரி வடிவமைப்புப் போட்டி

தேசிய செயல்திட்ட மாதிரி வடிவமைப்புப் போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தேசிய செயல்திட்ட மாதிரி வடிவமைப்புப் போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான டெக்சாஸ், ஐஐஎம் சார்பில் இந்திய இன்னவேட்டிவ் டிசைன் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் இருந்து 624 கல்லூரிகளைச் சேர்ந்த 11 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் 30 செயல் திட்டங்களும் அடங்கும்.
இறுதிச் சுற்றுப் போட்டிகள் பெங்களூரு ஐஐஎம் வளாகத்தில் நடைபெற்றது. இதில், 18 மாணவக் குழுக்கள் பங்கேற்றன. மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர்கள் மேகவர்மன், முகமது ரியாஸ், ரோஷித் ஆகியோர் அடங்கிய குழுவும் பங்கேற்றது. அவர்களின் செயல்திட்டம் தேசிய அளவில் 4-ஆவது இடத்தைப் பெற்றது.
இதற்கான பரிசுத் தொகையாக ரூ. 75,000, செயல் திட்ட மாதிரி வடிவமைக்க ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டன.
மேலும், ஐஐஎம் ராகவன் தொழிற்கல்வி மையத்தில் மூவருக்கும் ஓராண்டு பயிற்சி தரப்பட உள்ளது. அதன் பின்னர், செயல்திட்ட வளர்ச்சிக்காக ரூ. 20 லட்சம் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி, முதல்வர் கே.வெங்கடாசலபதி, துறைத் தலைவர் எஸ்.அன்புமலர், ஒருங்கிணைப்பாளர் பி.பார்த்திபன், பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com