பெண்கள் மேம்பாடு அடைந்தால்தான் நாட்டில் வறுமை ஒழியும் : ஐஏஎஸ் அதிகாரி கரியாலி

பெண்கள் மேம்பாடு அடைந்தால்தான் நாட்டில் வறுமை ஒழியும் என, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கரியாலி கூறினார்.

பெண்கள் மேம்பாடு அடைந்தால்தான் நாட்டில் வறுமை ஒழியும் என, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கரியாலி கூறினார்.
புதுவை ஆளுநர் மாளிகையில் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு, தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகே.கரியாலி சனிக்கிழமை ஆளுநர் மாளிகையில் சிறப்புரையாற்றியதாவது:
பெண்கள் சம்பாதிக்கும் நிலையை ஏற்படுத்தினால்தான் பெண் குழந்தைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படும். வறுமையில் உள்ள பெண்களுக்கு கல்வி கற்பித்து மேம்பாட்டுக்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் குடும்பங்கள் நல்ல நிலைக்கு வரும் என்றார் அவர்.
மேலும் அவர், தமிழகத்தில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடும், கோயில் செயல் அலுவலர்கள் பணியிடங்களில் ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கியதை நினைவு கூர்ந்தார்.இதைத் தொடர்ந்து, கரியாலி எழுதிய 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்ற நூலை ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நலத் துறைச் செயலர் மிகிர் வரதன், முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன், அகில இந்திய கைவினைஞர்கள் சங்கத் தலைவர் நிரஞ்சன், வணிகர் சங்கத் தலைவர் சிவசங்கரன், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com