அரசியல் கட்சிகள் அம்பேத்கருக்கு மரியாதை

புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கருக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அம்பேத்கருக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
 புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. சார்பில் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 இதில் அவைத் தலைவர் சீத்தா வேதநாயகம், நிர்வாகிகள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், சண்.குமாரவேல், தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் வடக்கு மாநிலக்கழக நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் விசுவநாதன் தலைமையில் அந்தக் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், பொதினி வளவன், முன்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க நிர்வாகிகள் நிலவழகன், ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 திராவிடர் கழகத்தினர் தலைவர் வீரமணி தலைமையிலும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோகுல்காந்தி தலைமையிலும், பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர் தலைவர் ராம்குமார் தலைமையிலும், பீம்சேனா அமைப்பினர் அரிகிருஷ்ணன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 இதுபோல, பிஎஸ்பி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 பாஜக சார்பில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொருளாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com