தனியார் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தனியார் நிறுவனத்தை மூடிவிட்டு, ஒட்டுமொத்த ஊழியர்களையும் வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அந்த நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தனியார் நிறுவனத்தை மூடிவிட்டு, ஒட்டுமொத்த ஊழியர்களையும் வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அந்த நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரி சேதுராபட்டு பகுதியில் தனியார் பன்னாட்டு நிறுவனம் 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 25 பெண்கள் உள்பட 200 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
 இந்த நிலையில், 13.11.2017 அன்று இந்த நிறுவன கதவில் நிறுவனம் மூடப்படுவதாகவும், இங்கு பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதைத் தொடர்ந்து, தொழிலாளர் ஆணையர் வள்ளுவன் முன்னிலையில் நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நிறுவனத்தை உடனடியாகத் திறக்கும்படியும், பின்னர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நிர்வாகத் தரப்பினரோ உயர்அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு பின்னர் தகவல் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
 ஆலை திறக்கப்படாததால் அதைக் கண்டித்து, நோவாட்டர் எல்க்டிரிக்ல் அன்ட் டிஜிட்டல் சிஸ்டம் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 25 நாள்களாக தொழிற்சாலை வாயிலில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 இந்த நிலையில், புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பா.ம.க. தொழிற்சங்கத்தின் செயலர் சு.செயபால், நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கத்தின் பொறுப்பாளர் ரமேசு, என்.ஆர்.காங்கிரஸ் தொழிற்சங்க அமைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்த நிலையில் வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர். மேலும், திங்கள்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என இந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் கெüரிநாதன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com