எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொகுப்பு நூலுக்கு கவிதைகளை அனுப்பலாம்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிதைகளை டிச. 16-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்று பாரதிதாசன் அறக்கட்டளை தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கவிஞர் கோ.பாரதி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கவிதைத் தொகுப்பு நூலுக்கு கவிதைகளை டிச. 16-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்று பாரதிதாசன் அறக்கட்டளை தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கவிஞர் கோ.பாரதி தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். புதுச்சேரி மக்களின் அன்பைப் பெற்றவர். மக்கள் வியக்கும் அரும்பணிகளை ஆற்றிய அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், 100 கவிதைகள் கொண்ட "பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.' என்ற நூலை வெளியிட ஏற்பாடாகி வருகிறது.
எம்.ஜி.ஆரின் பெருமைகளைக் குறிக்கும் விதமாக 24 வரிகள் கொண்ட கவிதையை படைப்பாளர்கள் எழுதி அனுப்பலாம். சிறந்த 100 கவிதைகள் நூலில் இடம் பெறும். மரபு கவிதைக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதுக் கவிதைகளும் ஏற்கப்படும்.
கவிதைகளை தட்டச்சு செய்து பெயர், முகவரி, செல்லிடபேசி எண்ணுடன், புகைப்படம் இணைத்து வருகிற 16-ஆம் தேதிக்குள் "கலைமாமணி பாரதி, தலைவர், பாரதிதாசன் அறக்கட்டளை, எண். 4, முதல் தெரு, காந்திநகர், புதுச்சேரி-605 009' என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.
சுய முகவரி எழுதிய அஞ்சல் அட்டையையும் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த நூல் வருகிற ஜனவரியில் வெளியிடப்படும்.
நூலில் இடம் பெறும் படைப்பாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com