குடியரசுத் தலைவர் தேர்தல் ஏற்பாடுகள்: மத்திய பார்வையாளர் ஆய்வு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மத்திய தேர்தல் பார்வையாளர் அருண்குமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மத்திய தேர்தல் பார்வையாளர் அருண்குமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இந்திய குடியரசு தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் மீராகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநில சட்டப்பேரவை அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, புதுச்சேரி சட்டப்
 பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 இதற்காக சட்டப்பேரவையிலுள்ள கமிட்டி அறையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை சட்டப்பேரவைச் செயலரும், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வின்சென்ட்ராயர் செய்துள்ளார்.
 இந்த நிலையில், மத்திய தேர்தல் பார்வையாளர் அருண்குமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறை, கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும் கேட்டறிந்தார். தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு , தேர்தல் நடத்தும் அதிகாரி வின்சன்ட் ராயர் ஆகியோர் உடனிருந்தனர்.
 ஏற்கெனவே முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர்களின் அறைகள் பூட்டப்பட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. வெளியாள்கள் யாரும் பேரவை வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை.
 பேரவை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்களை அகற்றுமாறு பார்வையாளர் அருண்குமார் உத்தரவிட்டார். மேலும் பேரவையின் 2 நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு, யாரும் நுழையாதபடி 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com