சிகிச்சை பெற்ற பெண் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

பாகூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனர்.

பாகூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்தனர்.
 சேதராப்பட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமார் (40). இவரது மனைவி பூபேஷினி (36). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லாத நிலையில் சேதராப்பட்டில் வசித்து வந்தனர்.
 இந்த நிலையில், பூபேஷினிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவக் கல்லுôரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த பூபேஷினி உடல்நலம் தேறியது.
 இதையடுத்து வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பூபேஷினி மருத்துவர்களிடம் கூறி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு அருந்திய பூபேஷினி திடீரென உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பாகூர் கிராம மக்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை, சரிவர பராமரிக்கவில்லை எனக் கூறி, மருத்துவமனையைக் கண்டித்து கடலுôர்-புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த கடலுôர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்ற மக்கள் மறியலை கைவிட்டு மருத்துவமனை அருகே திரண்டிருந்தனர்.
 அதுவரை கிருமாம்பாக்கம் போலீஸர் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனிடையே தகவலறிந்த பாகூர் எம்.எல்.ஏ தனவேல் அங்கு வந்தார். பினனர் அரைமணி நேரம் தாமதமாக வந்த கிருமாம்பாக்கம் போலீஸார் மற்றும் தனவேல் எம்எல்ஏ மருத்துவமனை நிர்வாகிகளிடம், பூபேஷனியின் உறவினர்களை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com