ஜிப்மரில் முப்பரிமாண பதிப்பு சேவை தொடக்கம்

ஜிப்மர் மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்பரிமாண பதிப்பு சேவையை

ஜிப்மர் மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்பரிமாண பதிப்பு சேவையை (3டி பிரிண்டிங்) இயக்குநர் எஸ்.சி.பரிஜா ஏழை மக்கள் மருத்துவச் சேவைக்கு அர்ப்பணித்து தொடக்கிவைத்தார்.
 இதன் மூலம் நோயாளிகளின் உடலுக்குள் வைக்கக்கூடிய பிளேட்டுகள், எலும்புகள் போன்றவற்றின் மாதிரியை துல்லியமாக அச்சிட்டு பயன்படுத்த இயலும்.
 இந்தியாவில் முதல்முதலாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளஅரசு மருத்துவமனை ஜிப்மர் ஆகும். தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற மாதிரிகளை தனியாரிடம் அச்சிட ஆகக்கூடிய செலவு ரூ.5,000 முதல் 10,000 வரை ஆகும்.
 இந்தச் சேவையை ஏழை மக்களுக்கு சலுகை விலையில் அளிப்பதன் மூலம் ஏராளமான நோயாளிகள் பயன்பெறுவர் என்று பரிஜா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com