யுவஸ்ரீ கலா பாரதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி மற்றும் பிற துறைகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் யுவஸ்ரீ கலா பாரதி விருது பெற விண்ணப்பிக்கலாம் என பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் பிற துறைகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் யுவஸ்ரீ கலா பாரதி விருது பெற விண்ணப்பிக்கலாம் என பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்ட அறிக்கை:
 பாரதி யுவ கேந்திரா சார்பில் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப் பணி, பரதநாட்டியம், பேச்சு, கவிதை போன்றவற்றில் சிறந்து விளங்கும் எல்கேஜி முதல் பிளஸ் 2 படிப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருதும், கல்லூரி மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தா விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
 ஒவ்வொருவருக்கும் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர் உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் விருதுக்கான பெரிய பட்டமும் ஸ்படிக மாலையும் வழங்கப்படும்.
 அந்தந்த துறைகளில் தகுதியுடைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற பரிசுக்கான நகல் பிரதிகளுடன் தங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணுடன் நெல்லை பாலு, நிறுவனர், பாரதி யுவ கேந்திரா, ஜி 102, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-16. 9442630815 என்ற முகவரிக்கு ரூ.10-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய விலாசமிட்ட உரையில் விவரங்களை அனுப்ப வேண்டும்.
 மேலும், நடந்து முடிந்த மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 80 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல் நகல் பிரதியுடனும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com