கிராம மக்கள் மூலம் குளங்களைத் தூர்வார நடவடிக்கை: கிரண் பேடி

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் கிராம மக்கள் மூலம் குளங்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் கிராம மக்கள் மூலம் குளங்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 ஆளுநர் கிரண்பேடி சனி, ஞாயிறு என இரு நாள்கள் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தூய்மை இந்தியா திட்டம், கழிவுநீர் வடிகால்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை பொதுமக்களுடன் சேர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
 அதன் தொடர்ச்சியாக கோயில் குளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தனது களப் பணியை மேற்கொண்டார். நகர்புறங்களில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று பார்வையிட்ட அவர் அது பற்றிய தொகுப்பை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார்.
 இந்த நிலையில் சோரப்பட்டு கிராம
 மக்களின் கோரிக்கையின்படி, அந்தக் கிராமத்துக்கு ஆளுநர் கிரண் பேடி பயணம் மேற்கொண்டார். கிராமம் முழுவதும் சுற்றிப் பார்த்த பின்னர் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
 சோரப்பட்டு கிராமத்தில் 2 ஏரிகள்,
 3 குளங்கள் உள்ளன. அனைத்தையும் தூர்வாருவது அவசியம். நீர் வரும் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளங்களுக்குச் செல்லும் கழிவுநீரை தடுத்து மாற்று வழியில் அனுப்புதல், மழைநீரை நீராதாரங்களுக்குச் செல்லும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
 100 நாள்கள் வேலைத் திட்டம் மூலம் கிராம மக்களை முழுமையாக பயன்படுத்தி குளங்களைத் தூர்வார வேண்டும். அரசை மக்கள் தேடி வருவதைக் காட்டிலும், அரசு நிர்வாகமே நேரடியாக சென்றால்தான் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நேரம், பொருள் மிச்சமாகும். களப் பயணத்தால்தான் நேரடியாக முடிவெடுத்தல், பொதுமக்கள் பங்கேற்பு போன்றவை உண்டாகிறது என்றார் கிரண் பேடி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com