குடிமைப் பணிகள் முதனிலைத் தேர்வு: 1,872 பேர் எழுதினர்

புதுச்சேரியில் நடைபெற்ற குடிமைப் பணிகள் முதனிலைத் தேர்வில் 1,872 பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் நடைபெற்ற குடிமைப் பணிகள் முதனிலைத் தேர்வில் 1,872 பேர் பங்கேற்றனர்.
 காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெற்றது.
 புதுச்சேரியில் விவேகானந்தா பள்ளி, வள்ளலார் அரசுப் பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
 இந்தத் தேர்வை எழுத புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாற்று திறனாளிகள் 13 பேர் உள்பட 3,522 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
 47 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை: இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 3,522 பேரில் 1,872 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
 தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க புதுச்சேரி பணியாளர் - நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com