புதுவை பல்கலை.க்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரை: யு.ஜி.சி. தணிக்கைக் குழுத் தகவல்

புதுவை பல்கலை.க்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என, முழு ஆய்வுக்குப் பின்னர் யு.ஜி.சி. சிறப்புத் தணிக்கைக் குழுத் தெரிவித்தது.

புதுவை பல்கலை.க்கு கூடுதல் நிதி வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என, முழு ஆய்வுக்குப் பின்னர் யு.ஜி.சி. சிறப்புத் தணிக்கைக் குழுத் தெரிவித்தது.
 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் புதுவை பல்கலை. 37-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது.
 இந்த நிலையில், நாடு முழுவதும் 10 மத்திய பல்கலை.களில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், கட்டமைப்பு வசதிகளைச் செய்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள யு.ஜி.சி. சிறப்புத் தணிக்கைக் குழக்களை அமைத்தது.
 அதன்படி, புதுவைப் பல்கலை.யிலும் பல்கலை. மானியக் குழு கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து பல்கலை.யின் தரத்தை ஆய்வு செய்தது.
 இந்தக் குழுவில் மகரிஷி தயானந்த் பல்கலை.யின் துணைவேந்தர் கைலாஷ் சூடானி, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஸ்ரீபத் கர்மால்கர், கெüஹாட்டி பல்கலை. பேராசிரியர் மசார் ஆசீப், பெங்களூரு ஐ.ஐ.எம். பேராசிரியர் சங்கரன் பாசு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதன்சூ மொகந்தி தலைமையில் இந்தக் குழுவினர் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 16 வரை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
 பேராசிரியர்கள், ஆய்வுத் துறை மாணவர்கள், நிதி, கல்வி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் நலச் சங்க நிர்வாகிகள், ஊழியர் நலச் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
 ரூ. 147 கோடிக்கு திட்ட வரைவு: இந்த நிலையில், பல்கலை. சார்பில் ரூ. 147 கோடிக்கு திட்ட வரைவு தணிக்கைக் குழுவிடம் வழங்கப்பட்டது.
 புதுவை பல்கலை.யில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துத் துறைகள், ஆய்வுக் கூடங்களில் கள ஆய்வு மேற்கொண்ட குழுவினர் சனிக்கிழமை துணைவேந்தர் அனிஷா பஷீர் கானிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
 பின்னர் துணைவேந்தர் அனிஷா பஷீர் கான், கூறியதாவது:
 தற்போது பல்கலை நிர்வாகத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இருப்பதாகத் தெரிவித்த ஆய்வுக் குழுவினர், கல்வி, புதிய கட்டுமானம், ஆய்வுத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரவும், மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத் திட்டங்களுக்கு அனுமதி பெறவும் தணிக்கைக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாகத் தெரிவித்தனர் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com