புதுவை வளர்ச்சிக்கு ஆளுநர் ஏற்படுத்திய  தடைகளை விரைவில் வெளியிடுவோம்: நமச்சிவாயம் அறிவிப்பு

புதுவை மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் ஏற்படுத்திய தடைகளை விரைவில் வெளியிடுவோம் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுவை மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் ஏற்படுத்திய தடைகளை விரைவில் வெளியிடுவோம் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
 அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஆளுநர் ஏற்படுத்தி வரும் பிரச்னை குறித்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவையில் எடுத்துக் கூறினர். புதுச்சேரி அரசு மக்களுக்கு செயல்படாமல் இருக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து பேரவையில் விவாதிக்கப்பட்டது.
 புதுச்சேரி அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதி பூண்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு பல்வேறு நிலைகளில் அரசுக்கு தடையாக உள்ளது. அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளிப்படையாக கேள்வி கேட்டால் பதில் அளிக்கத் தயாராக உள்ளோம்.
 ஆளுநரா? இல்லை எதிர்க்கட்சித் தலைவரா?
 ஆனால், உண்மைக்குப் புறம்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் போல நடந்து கொள்வது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.
 புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் தினம்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்னைகளை தீர்க்கக்கூடியவர்கள். எம்.எல்.ஏ.க்கள் மக்களின் பிரச்னைக்காக சொந்த நிதியையும் செலவு செய்கின்றனர். அதனால் சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தொகுதி மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 மக்களை திசை திருப்ப, தவறான தகவல்களை கொண்டு செல்ல நினைக்கிறார். புதுச்சேரி மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எதிர்த்து போராடவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
 அரசு செயல்பாட்டில் உள்ள ரகசியங்களை சமூக வலைதளங்களில் சொல்லி வருகிறார்.
 எந்தந்தெந்த கோப்புகள் ஆளுநரால் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. அதனால், ஆளுநர் எந்த விதத்தில் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளார் என்பன போன்றவை குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.
 முதல்வர் நாராயணசாமியின் கருத்தும், காங்கிரஸ் கட்சியின் கருத்தும் ஒன்றுதான். புதுச்சேரி அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஆளுநர் வெளியேறலாம் என்று முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றார் நமச்சிவாயம். அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com