புதுவையில் நாளை யோகா தின விழா

புதுச்சேரி கடற்கரையில் புதன்கிழமை (மே 21) சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி கடற்கரையில் புதன்கிழமை (மே 21) சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
 முதல்வர் நாராயணசாமி நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார். மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
 சுற்றுலா அமைச்சர் மல்லாடி தலைமை வகிக்கிறார். கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தலைமைச் செயலர் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
 நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை 7 மணிக்கு 2200 பள்ளி மாணவர்கள் மற்றும் 300 கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பெருந்திரள் யோகாசன நிகழ்ச்சி நடைபெறும்.
 மாற்றுத்திறனாளிகளுக்கும் தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 தொண்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன. பின்னர், யோகாசனம் குறித்த கருத்தரங்கம் பாரதி பூங்காவில் 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். கடற்கரை கைவினை அங்காடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும்.
 பெருந்திரள் யோகாசனம் நடைபெறுவதால் நடைப் பயிற்சிக்கு வருவோர் கடற்கரையை தவிர்த்து, துமாஸ் வீதி, ரோமண்ட் ரோலண்ட் வீதியை பயன்படுத்தலாம்.
 சுற்றுலா, கல்வித் துறை, நலவழித் துறை, மாசுக்கட்டுப்பாட்டுக் குழு இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com