பொதுத் தேர்வு: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

உருளையன்பேட்டை தொகுதியில் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உருளையன்பேட்டை தொகுதியில் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தொகுதியின் எம்.எல்.ஏவும், தெற்கு மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கி வருகிறார்.
 அதன்படி, 2015-16ஆம் கல்வியாண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிசு வழங்கும் விழா, முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி என். சிவா எம்.பி., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார்.
 விழாவில், பத்தாம் வகுப்பில் முதல் இடத்தைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம், சுவர் கடிகாரம், கைக் கடிகாரம், டிபன் பாக்ஸ், ஸ்கூல் பேக், பேனா, நோட்டு, சான்றிதழ் வைக்கும் பைல் அடங்கிய 7 பரிசுப் பொருள்களும், இரண்டாம் இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு 2 கிராம் தங்க நாணயத்துடன், 7 பரிசுப் பொருள்களும், மூன்றாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயத்துடன், 7 பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன. இதேபோல, பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 7 பரிசுப் பொருள்களுடன் இருசக்கர வாகனமும், இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன், 7 பரிசுப் பொருள்களும், மூன்றாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2 கிராம் தங்க நாணயத்துடன், 7 பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
 உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 714 மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் பரிசுப் பொருள்களை சிவா எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com