யோகா உடற்பயிற்சி அல்ல; அது வாழ்க்கை முறை: சித்த மருத்துவ அலுவலர்

யோகா என்பது உடற்பயிற்சி அல்ல; அது வாழ்க்கை முறை என மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.

யோகா என்பது உடற்பயிற்சி அல்ல; அது வாழ்க்கை முறை என மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய மருத்துவர் ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.
 கள விளம்பர அலுவலகம், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மற்றும் சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சவரிராயலு நாயக்கர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்த யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் ராஜேந்திரகுமார் பேசியதாவது:
 சித்த மருத்துவம் என்பது நோய் வராமல் தற்காத்து நீண்ட காலம் வாழ்வதற்கான வாழ்க்கை முறை ஆகும். சித்தர்கள் வகுத்தளித்த அஷ்டாங்கம் என்னும் எட்டு நிலைகளில் ஒன்றாக யோகா உள்ளது.
 மக்களின் ஆரோக்கியத்துக்கான ஆயுதமாக யோகா விளங்குகிறது. யோகா வெறும் உடற்பயிற்சி சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. அதுவும் ஒரு வாழ்க்கை முறைதான். உடலையும் மனதையும் செம்மைப்படுத்துவதுதான் யோகாவின் நோக்கமாகும்.
 இன்றைய வாழ்வில் மனநலம் பாதிப்படைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. மன நலத்தைப் பேண யோகாதான் சிறந்த வழி என்றார். தலைமையாசிரியை அ.ஹேமாவதி தலைமை வகித்தார். கள விளம்பர உதவி இயக்குநர் தி.சிவக்குமார் தொடக்க உரையாற்றினார்.
 பின்னர், மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சி அலுவலர்கள் மருத்துவர்கள் ஃபரிதா, பா.சித்ரா ஆகியோர் மாணவிகளுக்கு நின்ற நிலை, அமர்ந்த நிலை மற்றும் படுத்த நிலைகளில் 15 யோகாசனங்களைச் செயல் விளக்கத்தோடு கற்பித்தனர். இங்கு கற்றுக் கொடுத்த யோகாசனங்களை மாணவிகள் தொடர்ந்து செய்து வந்தால் ஞாபகத்திறன் அதிகரிக்கும், மாதவிடாய் பிரச்னைகள் இருந்தால் சீரடையும் மற்றும் உடல் வலுப்பெறும் எனத் தெரிவித்தனர்.
 உடற்கல்வி ஆசிரியர் கே.ராஜசேகர் வரவேற்றார். ஆசிரியை சி.திலகவதி நன்றி கூறினார். ஆசிரியை எஸ்.கீதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் செய்திருந்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com