ராகுல் காந்தி பிறந்த நாள்: சிறப்பு வழிபாடு, நல உதவி அளிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் சிறப்பு வழிபாடுகள், நல உதவிகள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் சிறப்பு வழிபாடுகள், நல உதவிகள் வழங்கப்பட்டன.
 ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் காலை புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில், ராகுல் காந்தி நீடூழி வாழ வேண்டி சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, தங்கத்தேர் இழுக்கப்பட்டது.
 பேரவை நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் வல்சராஜ், ஆர்.இ.சேகர், திருவேங்கடம், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில் காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்தார்.
 இதனைத் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து 100 ஏழைகளுக்கு இலவசத் துணிகள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஏழைகளுக்கு இலவசமாக துணிகளை வழங்கினர்.
 லட்சுமிநாராயணன் எம்.எல்ஏ., முன்னாள் எம்.எல்.ஏ, நீலகங்காதரன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏகேடி ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, துணைத் தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் ராஜாராம், மகளிர் காங்கிரஸ் வைஜெயந்தி, பஞ்சகாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 அதனைத் தொடர்ந்து சுப்பையா சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் ராகுல்காந்தி நீடூழி வாழ வேண்டி சிறப்பு ஆராதனையும், முல்லா வீதியில் உள்ள மௌலானா சாகிப் தர்காவில் சிறப்புத் தொழுகையும் நடைபெற்றது.
 நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com