உள்ளாட்சித் தேர்தல் நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரி மாநில உள்ளாட்சிக் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மாநில உள்ளாட்சிக் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 அமைப்பின் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெ.ராமசாமி, பரந்தாமன், பன்னீர் உள்பட பலர் பங்கேற்றனர்.
 தீர்மானங்கள்: உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் புதுவை அரசு காலம் கடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. அரசியல் அமைப்புச் சட்டம் 73, 74-ஆவது சட்டத் திருத்தங்களின்படி 5 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்த கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாத ஓய்வூதியம் தர வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் ரூ.400 கோடி மத்திய அரசு நிதி கிடைத்திருக்கும். எனவே, புதுவை அரசு உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அப்போது தான் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com