திருக்காமீஸ்வரர் கோயிலில் சூரிய வழிபாடு

வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை சூரிய வழிகாட்டைக் காண பக்தர்கள் குவிந்தனர்.

வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை சூரிய வழிகாட்டைக் காண பக்தர்கள் குவிந்தனர்.
 1400 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மீது விழுவது வழக்கம். இது சூரிய பகவான் திருக்காமீஸ்வரரை வழிபடுவதாக கருதி ஆண்டுதோறும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசிப்பார்கள். பங்குனி 9-ஆம் நாளான புதன்கிழமை சூரிய வழிபாட்டை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டிருந்தனர்.
 காலை சூரிய உதயம் ஆரம்பித்தவுடன் சூரியன் கதிர்கள் மூலவரை நோக்கி வரத் தொடங்கியது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com