மத்திய நிதி ஆணையத்தில் புதுவையை சேர்க்க வேண்டும்: கோகுலகிருஷ்ணன் எம்.பி.

மத்திய நிதி ஆணையத்தில் புதுவையை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் என்.கோகுலகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

மத்திய நிதி ஆணையத்தில் புதுவையை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் என்.கோகுலகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
 நாடாளுமன்ற மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: நாட்டிலேயே தில்லி, புதுச்சேரியில் தான் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களாக உள்ளன.
 மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் புதுச்சேரியில் கடும் நிதிச் சிக்கல் உருவாகி உள்ளது. மத்திய அரசிடம் இருந்து போதிய மானிய நிதி கிடைப்பதில்லை.
 கடந்த 2007-ம் ஆண்டு மத்திய அரசின் வலியுறுத்தலால் புதுவைக்கு என தனிக்கணக்கு தொடங்கப்பட்டது. இது எங்கள் மீது திணிக்கப்பட்ட முடிவாகும்
 இதனால் தற்போது ரூ.7200 கோடி கடன் சுமை புதுவை மீது திணிக்கப்பட்டுள்ளது. ரூ.2200 கோடி கடன் தள்ளுபடி கோரப்பட்டு எந்தப் பலனும் இல்லை.
 ஜிஎஸ்டி கவுன்சிலில் புதுவையை முழுமையான உறுப்பினராக சேர்க்க வேண்டும். போதுமான நிதியை பெற ஏதுவாக மத்திய நிதி ஆணையத்தில் புதுவையை சேர்க்க வேண்டும்.
 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் கூடுதலாக ரூ.700 கோடி நிதியை மத்திய அரசு தர வேண்டும்.
 திருத்திய மதிப்பீட்டின்படி 2016-17-ல் ரூ.3178 கோடியை புதுவை அரசு மத்திய நிதியாக கோரியுள்ளது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.1415.14 கோடிக்கு தான் ஒப்புக் கொண்டுள்ளது.
 மேலும், நிகழாண்டு 2017-18-பட்ஜெட்டில் மத்திய நிதியாக ரூ.3132 கோடி கோரப்பட்டுள்ளது. ஆனால் மைய அரசு வெறும் ரூ.1483 கோடிக்கு தான் ஒப்புக் கொண்டுள்ளது.
 தற்போதுள்ள ரூ.7000 கோடி கடனை அடைக்க ஏதுவாக ஒரே தவணை நிதி தர வேண்டும். ஆண்டுதோறும் மானிய நிதியில் 10 சதவீதம் நிதியை அதிகரிக்க வேண்டும் என்றார் கோகுலகிருஷ்ணன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com