அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் குறித்து மத்திய அரசிடம் புகார்: அமைச்சர் மல்லாடி

மருத்துவ பட்டமேற்படிப்பில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலை

மருத்துவ பட்டமேற்படிப்பில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலை. தொடர்பாக மத்திய அரசிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
 நீட் தகுதி பெற்ற மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகளுக்கு சென்டாக் கீழ் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி கல்விக் கட்டண நிர்ணயக் குழு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. ஆனால் அதை விட தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிக்கிறது.
 இல்லையென்றால் கல்லூரிகளில் சேர அனுமதிப்பதில்லை என சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் புகார் எழுப்பினர்.
 இதற்கு பதிலளித்த அமைச்சர் மல்லாடி, அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளின் தடையில்லாச் சான்று ரத்து செய்யப்படும். மேலும் தில்லி சென்று மத்திய சுகாதாரத்துறையிடம் புகார் செய்யப்படும் என தெரிவித்தார்.
 இந்த நிலையில் வியாழக்கிழமை அமைச்சர் மல்லாடி தில்லி சென்றிருந்தார்.
 அங்கு மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் அருண் சிங்காலைச் சந்தித்து சென்டாக் மூலம் மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகளுக்கு தேர்வான மாணவர்களை சேர்க்க மறுக்கும் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்து புகார் செய்தார்.
 பின்னர் இதுகுறித்து மல்லாடி கூறியதாவது:
 புதுச்சேரியில் கல்விக் கட்டணமாக ரூ.6 லட்சம் நிர்ணயிக்கப்பட்டும், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பது, சேர்க்க மறுக்கும் கல்லூரிகள் தொடர்பாக மத்திய அரசிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
 மேலும் ஏனாமில் புதிய விளையாட்டு பயிற்சி மையத்தை வரும் ஜூன் 6-ம் தேதி திறப்பது தொடர்பாக சாய் இந்திய விளையாட்டு ஆணையம் இயக்குநர் கிஷோர், புதுவை கல்வித் துறை இயக்குநர் குமார் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 மேலும் புதுவை சாரம் பகுதியில் 100 படுக்கைகளுடன் கூடிய சாய் மகளிர் விûளாட்டு விடுதி கட்டவும் ரூ.13 கோடியை விடுவிக்க சாய் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com