இன்று சென்டாக் மருத்துவ இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை காலாப்பட்டு புதுவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை காலாப்பட்டு புதுவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
 பட்டய மேற்படிப்பு
 இந்த நிலையில், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கான கலந்தாய்வு
 வியாழக்கிழமை நடைபெற்றது.
 அப்போது, முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரிகளில் சீட் தேர்வு செய்த மாணவர்கள் கல்விக் கட்டண வரைவோலையுடன் சென்டாக் அதிகாரிகளை அணுகினர்.
 அப்போது அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு, மாணவர்களிடமிருந்து கல்லூரியில் கட்டுவதற்கான கட்டண வரவோலையை பெற்றனர்.
 இதையடுத்து, நண்பகல் 12 மணியளவில் கலந்தாய்வு தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டிருந்த 6 இடங்களுக்கு 276 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களில் 3 பேர் இடங்களை தேர்வு செய்தனர்.
 தொடர்ந்து, அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள 20 இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் 52 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 19 பேர் கல்லூரியில் சேர ஆணை கடிதம் பெற்றனர். இன்னும் அரசு ஒதுக்கீட்டில் 3 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடமும் காலியாக உள்ளது.
 இன்று 2-ம் கட்ட கலந்தாய்வு
 மருத்துவ பட்டமேற்படிப்பில் காலியாக அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
 காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 685 முதல் 64,107 வரை நீட் ரேங்க எடுத்த மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு முதுநிலை பல் மருத்துவ படிப்பில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மாலை 4 மணிக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com