சுமைப் பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு புதுவை பிரதேச சுமைப் பணித் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு புதுவை பிரதேச சுமைப் பணித் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 புதுவை அரசு கடந்த மார்ச் மாதம் பேரவை கூட்டத்தொடரில் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை அவகாசமோ, விவாதமோ இன்றி நிறைவேற்றியுளளது. இத்தொழிலாளர் விரோதச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். சுமைப் பணித் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பிற மாநிலங்களில் உள்ளது போல் சுமைப் பணித் தொழிலாளர்களுக்கு புதுவையிலும் நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் காமராஜர் சிலையில் இருந்து நேரு வீதி, காந்தி சாலை, மிஷன் வீதி வழியாக பேரணியாகச் சென்று தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். பின்னர், அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் எம்.தயாளன் தலைமை வகித்தார்.
 செயலாளர் ஏ.விஜயகுமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் டி.சிவராமன், பி.பிரகாஷ். பி.ராஜ்குமார், கே.ராமசாமி,
 டி.கிருஷ்ணமூர்த்தி, பாபு, ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com