கதிர்காமம் அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
By DIN | Published on : 20th May 2017 07:49 AM | அ+அ அ- |
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி தொடர்ந்து 6-ஆவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இங்கு பத்தாம் வகுப்பு பயின்று தேர்வு எழுதிய 130 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
அரசுப் பள்ளியை அலட்சியப்படுத்தாமல், நன்றாகப் படித்து சிறந்த மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசு பள்ளியை நாடி வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.