சுமைப் பணி தொழிலாளருக்கு எதிரான மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுவை அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்

புதுவை அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில், புதுவை தலைமை தபால் நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் புருஷோத்தமன், அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாநிலத் துணைத் தலைவர் மோதிலால் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநிலச் செயலர் சோ.பாலசுப்பிரமணியன், அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் செயலர் பழனி, ஜனநாயகக் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத் துணைத் தலைவர் அக்பர், மத்திய பணிக்குழு உறுப்பினர் முருகன், புதுவை மாநில நெசவாளர் சங்க துணைத் தலைவர் கெளரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொழிலாளர் கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான சுமைப் பணி தொழிலாளர் சட்ட வரைவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும், சட்ட விரோத ஒப்பந்தத் தொழிலாளர் முறை முழுவதையும் தடை செய்ய வேண்டும். போலி ஒப்பந்ததாரர்கள் கைது செய்யப்பட வேண்டும், கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை அளிக்க வேண்டும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஒய்வூதியம் ரூ. 7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com