ராஜீவ் காந்தி நினைவு ஜோதி புதுவை வருகை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி பெங்களூருவில் இருந்து நினைவு ஜோதி சனிக்கிழமை புதுச்சேரி வந்தடைந்தது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாளையொட்டி பெங்களூருவில் இருந்து நினைவு ஜோதி சனிக்கிழமை புதுச்சேரி வந்தடைந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதன் நினைவாக ஆண்டுதோறும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இருந்து ஐஎன்டியுசி சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், புதுச்சேரி வழியாக நினைவு ஜோதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதன்படி, 26-வது நினைவு ஜோதி யாத்திரை, கர்நாடக மாநில ஐஎன்டியூசி தலைவர் பிரகாசம் தலைமையில் புதுச்சேரிக்கு வந்தது. ஜோதி யாத்திரைக் குழுவினரை வழியனுப்பும் நிகழ்ச்சி, கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, லட்சுமிநாராயணன் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு யாத்திரை ஜோதியை வரவேற்றனர். பின்பு கர்நாடக மாநில காங்கிரஸாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை, புதுச்சேரி மாநில காங்கிரஸார் வழியனுப்பி வைத்தனர். நினைவு ஜோதி சென்னை வழியாக ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com