புதுவை அரசின் பட்ஜெட்: பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டைக் கண்டித்து, பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டைக் கண்டித்து, பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு, நிகழாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், மக்களுக்கு உதவாத வெற்று பட்ஜெட் எனக் கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமையில், பொதுச் செயலர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், முன்னாள் தலைவர்கள் கேசவலு, தாமோதர், நிர்வாகிகள் செல்வம், சோமசுந்தரம், துரைகணேசன், மூர்த்தி, சிவானந்தம், மோகன்குமார் ஆகியோர் கொண்டனர்.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், பட்ஜெட் நகலைக் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com