குளிர்காலக் கூட்டத் தொடரை குறைந்தது ஒரு வாரம் நடத்த அதிமுக வலியுறுத்தல்

புதுவை சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரை குறைந்தது ஒரு வாரம் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.இதுதொடர்பாக சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன்

புதுவை சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரை குறைந்தது ஒரு வாரம் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடைபெற உள்ள குளிர்காலக் கூட்டத் தொடரை குறைந்தது ஒரு வாரமாவது நடத்த அரசு முன்வர வேண்டும். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது, அறிவித்த முதியோர், விதவை உதவித் தொகை, குடிசை மாற்று வாரியம் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகட்ட 3 லட்சம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் செயல் வடிவம் பெறவில்லை.
மேலும், பல திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அவை முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இவை பற்றியும் மக்கள் நலன் பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கவும் குறைந்தபட்சமாக 7 நாள்களாவது சட்டப்பேரவையை நடத்த அரசுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆலோசனை வழங்க வேண்டும். மரபுகளைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் மற்றும் ஆளுநருக்கு உள்ளது. பேரவைத் தலைவரின் உத்தரவையும் மீறி, நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, பேரவை உள்ளே செல்வோம் என நியமன எம்.எல்.ஏ.க்கள் கூறி வருவது கண்டிக்கத்தக்கது. பேரவையைத் தொடர்ந்து நடத்துவதற்கு முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் தைரியம் இல்லை. அரிசிக்குப் பதிலாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com