உலக நீரிழிவு தின விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 உலக நீரிழிவு தின விழா ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் பெண்கள் மற்றும் நீரிழிவு நோய் என்பதாகும்.
 இதனையொட்டி புதுவை அரசு நலவழித் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் புதுச்சேரி வாழ்வியல் முறை மாற்று சுகாதார மையத்தில் நடைபெற்றது.
 சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் முகாமை தொடக்கி வைத்தார். இதில், 30 வயதுக்கு மேற்பட்ட இருபாலினரும் தொற்றா நோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
 அரவிந்தர் கண் மருத்துவமனை மருத்துவர்கள் குமார், கவிப்பிரியா ஆகியோர் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை செய்தனர்.
 இதனைத் தொடர்ந்து புதுவை கடற்கரைச் சாலை கார்கில் நினைவிடத்தில் இருந்து விழிப்புணர்வுப் பேரணி தொடங்கியது. புதுவை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மோகன்குமார் தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 நலவழித் துறை இயக்குநர் ராமன், சுகாதார இயக்கக இயக்குநர் காளிமுத்து, மருத்துவர்கள் சாந்திமதி, ஸ்ரீதரன், புருஷோத்தமன், பாலாஜி, மகேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 இதுபோன்ற சிறப்பு முகாம்கள் புதுவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com