எரிசக்தி சேமிப்பு: பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

புதுவை அரசு கல்வித் துறை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை, மத்திய அரசு ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு "எரிசக்தி சேமிப்பு' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

புதுவை அரசு கல்வித் துறை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை, மத்திய அரசு ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு "எரிசக்தி சேமிப்பு' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பங்கேற்றனர். எரிசக்தி சேமிப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பூமியை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருப்பது தொடர்பாக ஓவியப்போட்டி நடத்தப்பட்டதின் நோக்கமாகும்.
 புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் முதல் கட்டமாக பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 555 பள்ளிகளில் இருந்து 34,519 பேர் பங்கேற்றனர்.
 மொத்தம் 1100 ஓவியங்கள் கல்வித் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவின் கீழ் 50 சிறந்த ஓவியங்கள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.
 தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு இடையே மாநில போட்டி கோரிமேடு அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்டமேற்படிப்பு மையத்தில் நடைபெற்றது. இதில் வெல்வோருக்கு தலா ரூ.20,000, இரண்டாம் பரிசாக தலா ரூ.15,000, மூன்றாம் பரிசாக தலா ரூ.10,000, 10 ஆறுதல் பரிசுகளாக தலா ரூ.5000 வீதம் ரூ.50 ஆயிரம் அளிக்கப்படுகிறது. மேலும், தேசிய அளவிலான ஓவியப் போட்டிக்கும் தகுதி பெறுவர்.
 போட்டிக்கான ஏற்பாடுகளை எரிசக்தி முகமை மேலாண் இயக்குநர் சுனித்தா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com