ஜிப்மரில் நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு கண்காட்சி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 உலக நீரிழிவு நோய் தினம், "மகளிர் மற்றும் நீரிழிவு - ஆரோக்கியமான எதிர்காலம் நமது உரிமை' என்ற தலைப்பில் ஜிப்மர் செவிலியர் கல்லூரி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
 இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா தொடக்கி வைத்தார்.
 செவிலியர் கல்லூரி முதல்வர் ஆ.து. குமாரி வரவேற்றார்.
 நீரிழிவியல் துறைத் தலைவர் சூரியநாராயணா அறிமுகவுரை ஆற்றினார். இருதய அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் சாய் சந்திரன், மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் பாடே கலந்துக்கொண்டனர்.
 செவிலியர் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கண்காட்சியினை ஏற்பாடு செய்தனர். இதில் நீரிழிவு நோயின் காரணம், தடுப்புமுறை, உணவுப்பழக்க வழக்கம், மருந்து எடுக்கும் முறை ஆகியவை பற்றி விளக்க முறை செய்து காட்டப்பட்டது.
 நான்காம் ஆண்டு மாணவ மாணவிகள் நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு முதலியவற்றைக் கொண்டு நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 சமூக நல செவிலியத் துறை ஆசிரியர்கள் ரமேஷ், யமுனா, பொற்கொடி உள்பட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com