மீனவப் பெண்களுக்கு மானியத்துடன் மூன்று சக்கர ஸ்கூட்டர்: விண்ணப்பிக்கக் கோரிக்கை

மீனவப் பெண்கள் மானியத்தில் மூன்று சக்கர ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா. இளங்கோ தெரிவித்தார்.

மீனவப் பெண்கள் மானியத்தில் மூன்று சக்கர ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா. இளங்கோ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தலைச்சுமையாகவும், சாலையோரங்களில்அமர்ந்தும் மீன் வியாபாரம் செய்யும் மீனவப் பெண்களுக்கு பயன்படும் வகையில், மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வாகனத்தை மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் வங்கிக் கடன் மூலம் வழங்க தேசிய மீனவர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதற்கான மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 
காதி கிராமத் தொழில் வளர்ச்சிக் கழகமும் ஏழை, எளிய சுயதொழில் தொடங்கும் மீனவப் பெண்களுக்கு உதவ முன் வந்துள்ளது.
குறைந்த மின்சார செலவில் இயங்கும் இந்த வாகனத்தை மத்திய அரசு மீன்வளத் துறை மற்றும் அனைத்து மாநில மீன்வளத் துறைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக வரும் 24}ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் அகில இந்திய மீனவர் பிரதிநிதிகள் மாநாடு நிறைவு விழாவில் 20 பேருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. 65% மானியத்திலும், 30% வங்கிக் கடனாகவும் இந்த ஸ்கூட்டர் வழங்கப்படும். பயனாளிகள் 5% பங்களிக்க வேண்டும். 
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பங்களை தலைவர், தேசிய மீனவர் பேரவை 168, சுப்பையா சாலை, (ரயில்வே நிலைய சாலை) புதுச்சேரி - 1 என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ, மின் அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம். மின் அஞ்சல் முகவரி : milango1955@gmail.com.
மேலும், விவரங்கள் அறிய 9345455122 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார் இளங்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com