15 பேர் குண்டர் சட்டத்தில் கைது: டிஜிபி கெளதம் தகவல்

புதுவையில் இதுவரை 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சுனில்குமார் கெளதம் தெரிவித்தார்.

புதுவையில் இதுவரை 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சுனில்குமார் கெளதம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறோம். நடந்து ரோந்து செல்வது, சைக்கிளில் ரோந்து செல்வது, மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்வது,
இரவில் ரோந்து செல்வது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருவதால் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பு தடுத்து வருகின்றோம்.
புன்னகைத் திட்டம் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பள்ளிகளில் இடை நிற்கும் சிறுவர்கள் மற்றும் சிறு, சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை அடையாளம் கண்டு தொழில்பயிற்சி அளித்து வேலை ôய்ப்பு பெற்றுத் தருகிறோம். கொடுமையான குற்றங்களை செய்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகிறோம். இதுவரை 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நீதிமன்றம் மூலம் விதிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை நீக்கியுள்ளார். அதே சமயம் அவர் கொலை வழக்கில் இன்னமும் சிறையில்தான் இருந்து வருகிறார். முதுநிலை எஸ்.பி. உள்ளிட்ட அனைவரும் குழுவாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசின் ஆதரவும் கிடைத்து வருகிறது.
காவல்துறையில் இருந்து கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பணி நீக்கம், இடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில்தான் எஸ்.பி. தெய்வசிகாமணி மீது இடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் உயர் நீதிமன்றத்தை அனுகியதால், நீதிமன்றம் உத்தரவின்படி பணி வழங்கப்பட்டுள்ளது என்றார் கெளதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com