"போக்குவரத்துத் துறையை முதல்வரே ஏற்க வேண்டும்'

பிஆர்டிசி நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய முதல்வரே போக்குவரத்துத் துறையை ஏற்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பிஆர்டிசி நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய முதல்வரே போக்குவரத்துத் துறையை ஏற்க வேண்டும் என மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதன் பொதுச் செயலாளர் இரா.முருகானந்தம் முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பிய மனு விவரம்:
தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் அதிக பயணிகள் ஏறும் வழித் தடங்களிலேயே பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதனால் பேருந்து வசதி கிடைக்காத மக்களுக்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி அரசு பி.ஆர்.டி.சி. கழகத்தை தொடங்கியது. 
போக்குவரத்துத் துறைக்கு பேருந்துகளை வைத்துள்ள ஷாஜகான் அமைச்சர் ஆனது முதல், பி.ஆர்.டி.சி. கழகம் தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, அதிக வசூல் வரும் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வந்த பி.ஆர்.டி.சி. பேருந்துகள் நிறுத்தப்பட்டு, அந்த வழித் தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
உதாரணமாக காரைக்காலில் டயர்கள் இல்லாததால் 6 பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளின் டயர்களைக் கழற்றி பிற பேருந்துகளுக்கு போட்டால் கூட நிறுத்தப்பட்டுள்ள 6 பேருந்துகளில் நான்கை இயக்க 
முடியும். அதுபோல, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்டு வந்த 17 பி.ஆர்.டி.சி. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பி.ஆர்.டி.சி. ஆண்டுக்கு ரூ.1.98 கோடி வருமானத்தை இழந்துள்ளது. 
புதுச்சேரியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பி.ஆர்.டி.சி. பேருந்துகள் கடந்த 7-ஆம் தேதி தீ வைத்து எரிக்கப்பட்டன. 
இதுபோன்ற நடவடிக்கைகளால் பி.ஆர்.டி.சி.யின் வருமானம் கடந்த ஆட்சியில் இருந்ததைவிட பாதியாக குறைந்துவிட்டது. 
மேலும், பி.ஆர்.டி.சி. நிர்வாகம் சரியாக செயல்படாததற்கு நிரந்தர மேலாண் இயக்குநர் இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது. 
பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் 34 பேர் வெளியிடங்களில் வேலை செய்து வருகின்றனர். இதனால் பி.ஆர்.டி.சி.க்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.25 கோடி தேவையற்ற செலவு ஏற்படுகிறது. ஊழியர்கள் எங்கு வேலை செய்கின்றனரோ அங்கேயே அவர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஆர்.டி.சி.யின் வருமானம் குறைந்தது, பேருந்துகள் எரிக்கப்பட்டது குறித்து நியாயமான விசாரணை நடைபெற போக்குவரத்துத் துறையை முதல்வர் நாராயணசாமி ஏற்க வேண்டும். 
அதன் பின்னர் அவர் பேருந்துகள் யாரால், எதனால் எரிக்கப்பட்டது. எதனால் அதன் வருமானம் குறைந்தது என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதன் மூலம் பி.ஆர்.டி.சி. நிறுவனமும் பிற அரசு நிறுவனங்களைப் போல நலிந்து போகாமலும், சம்பளத்துக்கு அரசை எதிர்பார்க்காமலும் இருக்கும் வகையில் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com