சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் பிறந்த நாள் விழா

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தின் 67-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தின் 67-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 இதை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோயிலில் காலை தங்கத் தேர் இழுக்கப்பட்டது. இதில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, பேரவைத் துணைத் தலைவர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், லட்சுமி நாராயணன், எம்.என்.ஆர்.பாலன், தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், வினாயகமூர்த்தி, நீல கங்காதரன், தேவதாஸ், பொது செயலர்கள் ஏகேடி ஆறுமுகம், சங்கர், தனுசு, கருணாநிதி, அப்துல் ரகுமான், சிவ சண்முகம், ராஜாராமன், ஜெயக்குமார், சேகர்,
 முத்துகுமாரசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள்
 கோவிந்தராஜ், சிவா, வின்சென்ட் ராஜ், வேல்முருகன், முத்து, ஆர்.இ.சேகர், சேவா தள தலைவர் சிபி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, துணைத் தலைவர்கள் சரவணன், கோபி, காங்கிரஸ் நிர்வாகிகள், காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
 இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ரெயின்போ நகர் பிரெஞ்சு கார்னர் பகுதியில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்குதல், அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்குதல், ஜீவா நகர் 45 அடி சாலை சந்திப்பில் அன்னதானம் வழங்குதல், ரெயின்போ நகரில் மதர்ஹோம் ஆதரவற்ற இல்லச் சிறுவர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 மேலும், சுதந்திர பொன்விழா நகர் நல்வாழ்வு சங்கம் சார்பில் அன்னதானம் வழங்குதல், ஜிப்மரில் அன்னதானம், கரியமாணிக்கம், சூரமங்கலம் மற்றும் மடுகரை மந்தவெளி திடலில் அன்னதானம் வழங்குதல், நெட்டப்பாக்கம் மற்றும் மடுகரை திரௌபதியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 மேலும், பல்வேறு ஆதரவற்றோர் சிறுவர், முதியோர் இல்லங்களிலும் பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் அன்னதானம் வழங்கி அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com