ஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும்: முதல்வர்

ஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

ஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
 ஜிப்மர் மருத்துவமனையில் மருந்தியாலாளர்கள், உடலியக்கவியலாளர்கள் 63-ஆவது தேசிய மாநாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஜிப்மர் இயக்குநர் பரிஜா தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் பிரவதி பால் வரவேற்றார். அமைப்புத் தலைவர் ஜிஎஸ்.கவுர் மாநாடு குறித்து விவரித்தார். முதன்மையர் ஜிகே.பால், மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் பதே, முதன்மையர்கள் சுவாமிநாதன், விஷ்ணுபட் வாழ்த்திப் பேசினர்.
 முதல்வர் நாராயணசாமி மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
 தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் புகழ் பெற்றுள்ளது. புதுவை மற்றும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். சிறிய மாநிலமான புதுவையில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கல்வி, மருத்துவக் கேந்திரமாக புதுவை திகழ்கிறது. கிராமப்புற மக்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிறந்த சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
 உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக ஜிப்மர் தனி மையத்தை தொடங்க உள்ளது. அதற்கான நிலத்தை வழங்க அரசு தயாராக உள்ளது என்றார் நாராயணசாமி. அமைப்புச் செயலர் விவேக்குமார் சர்மா நன்றி கூறினார். இந்த மாநாடு சனிக்கிழமை நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com