என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், மத்திய தொழிலாளர்

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த அடிப்படை ஊதியம், அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக புதுச்சேரியிலுள்ள  மத்திய தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளர்கள் நலத் துறை உதவி ஆணையர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மட்டுமே பங்கேற்றனர். என்எல்சி நிர்வாகத் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்புச் செயலர் சேகர் கூறியதாவது:
தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகத் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. வருகிற 16-ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் அறிவித்தபடி மத்திய தொழிலாளர்கள் ஆணையம் முன் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com