புதுவையில் சுற்றுலாத் திருவிழா இன்று தொடக்கம்

புதுவையில் சுற்றுலாத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக். 22) தொடங்குவதாக சுற்றுலாத் துறை இயக்குநர் முனிசாமி தெரிவித்தார்.

புதுவையில் சுற்றுலாத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (அக். 22) தொடங்குவதாக சுற்றுலாத் துறை இயக்குநர் முனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய சுற்றுலா அமைச்சகம், அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அதன் பயன்களை அனைவரும் அறியும் வகையிலும் சுற்றுலாத் திருவிழாவை நடத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில், புதுவை சுற்றுலாத் துறை பின்வரும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (அக். 22) காலை 10 மணி அளவில் தூய இருதய ஆண்டவர் உயர்நிலைப் பள்ளியில் புதுவை ஓவியர் மன்றத்துடன் இணைந்து புதுவை சுற்றுலா தலங்களை பிரதிபலிக்கும் ஓவியப் போட்டி நடைபெறும்.
தொடர்ந்து, திங்கள்கிழமை (அக். 23) காலை புதுச்சேரியில் அமைந்துள்ள பாரம்பரிய பகுதிகளான தூமாஸ் வீதி, லபோர்தனே வீதி, பாரதி பூங்கா வரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில், கல்வித் துறையுடன் இணைந்து கண்டறிவோம் இந்தியாவை என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி - வினா நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை  (அக். 24) பிற்பகல் 2 மணியளவில் புதுவை வர்த்தக சபையில் இன்டாக் மற்றும் கல்வித் துறையுடன் இணைந்து புதுச்சேரி பாரம்பரியம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் குறித்து கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
 புதன்கிழமை (அக். 25) பாரதிதாசன் மகளிர் கல்லூரியுடன் இணைந்து சுற்றுலா கருத்தரங்கம் நடைபெறும். சுற்றுலா திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் சுற்றுலா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி தொடக்கி
வைப்பார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் தலைமை வகிப்பார். லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, சுற்றுலாத் துறைச் செயலர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர். ஓவியப் போட்டி, வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com