குப்பை தேக்கம், சுகாதாரச் சீர்கேடு: புகார் தெரிவிக்க புதிய செயலி: ஆளுநர் தொடக்கி வைத்தார்

உழவர்கரை நகராட்சி சார்பில் குப்பைகள் தேக்கம், சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்க புதிய செயலியை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

உழவர்கரை நகராட்சி சார்பில் குப்பைகள் தேக்கம், சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்க புதிய செயலியை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
 தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நடைபெற்றது. இந்த விழாவை 15 நாள்களுக்குக் கொண்டாடும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது. "சுத்தமே சேவை' என்ற அடிப்படையில் இந்த விழா குறிஞ்சி நகர் பூங்காவில் நடைபெற்றது.
 விழாவில் பொதுமக்கள் அனைவருக்கும் பச்சை, நீல நிற குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
 இதனைத் தொடர்ந்து, ஆளுநர் கிரண் பேடி சுகாதாரச் சீர்கேடுகள் குறித்தும், குப்பைகள் அதிகம் தேங்கும் பகுதிகள் குறித்தும் பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவிக்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட "ஸ்வச்சத்தா' என்ற புதிய செயலியைத் தொடக்கி வைத்தார்.
 நிகழ்ச்சிக்கு பேரவைத் துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் எம்.எஸ்.ரமேஷ் வரவேற்றார். விழாவில் ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
 சுத்தம் என்பது ஒவ்வொரு தனி நபர், வீடு, தெருவில் இருந்தும் தொடங்கப்பட வேண்டும். புதுச்சேரி மிகவும் அழகமான நகரம். இந்திய வரை படத்தில் புதுச்சேரி தூய்மையான நகரமாக வரவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் நலச் சங்கம் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அந்தப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து துப்புரவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
 மேலும், வாரந்தோறும் குடியிருப்புப் பகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள், நகராட்சி அதிகாரிகள், துப்புரவு ஊழியர்கள் கூட்டம் நடத்தி, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
 தொடர்ந்து, புதிய செயலியைத் பதிவிறக்கம் செய்து எவ்வாறு புகார் செய்வது என பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
 விழாவில், உள்ளாட்சித் துறைச் செயலர் ஜவஹர், இயக்குநர் முகமது மன்சூர், நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 தூய்மை இந்தியா விழாவானது, அக்டோபர் 2 -ஆம் தேதி வரை புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com