பி.ஏ. எல்.எல்.பி. படிப்புக்கு செப். 18-இல் இறுதிக் கட்டக் கலந்தாய்வு

பி.ஏ. எல்.எல்.பி., பி.எஸ்சி. வேளாண் பாடப் பிரிவுகளுக்கான இறுதிக் கட்டக் கலந்தாய்வு வருகிற 18-ஆம் தேதி நடைபெறும் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்தது.

பி.ஏ. எல்.எல்.பி., பி.எஸ்சி. வேளாண் பாடப் பிரிவுகளுக்கான இறுதிக் கட்டக் கலந்தாய்வு வருகிற 18-ஆம் தேதி நடைபெறும் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்தது.
 பி.எஸ்சி. விவசாயப் பாடப் பிரிவில் 4 இடங்களும், பி.எஸ்சி. தோட்டக்கலைப் பாடப் பிரிவில் 3 இடங்களும் காலியாகவுள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
 அதன்படி, காலை 9 மணிக்கு தகுதியுள்ள எஸ்சி பிரிவினர், மாஹே ஓபிசி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் நிரம்பாத இடங்கள் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்படும்.
 தொடர்ந்து, காலை 9.15 மணிக்கு 200 முதல் 134.500 வரை கட் - ஆஃப் மதிப்பெண்கள் எடுத்த அனைத்துப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இதேபோல, பி.ஏ. எல்.எல்.பி. (5 ஆண்டுகள் சட்டப் படிப்பு) பாடப் பிரிவில் அரசு ஒதுக்கீட்டில் 8 இடங்களும், பிற மாநிலத்தவருக்கான ஒதுக்கீட்டில் ஓர் இடமும் காலியாகவுள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இறுதிக் கட்டத் கலந்தாய்வும் செப். 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, காலை 9.30 மணிக்கு 76.779 முதல் 45 வரை கட் - ஆஃப் மதிப்பெண்கள் எடுத்து பிற மாநிலத்தவருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
 தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு தகுதியுள்ள இபிசி பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
 இதில் நிரம்பாத இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படும். தொடர்ந்து, காலை 10 மணிக்கு அனைத்துப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் 79.614 முதல் 40.417 வரை கட் - ஆஃப் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
 இந்தக் கலந்தாய்வுக்கு மாணவர்கள் பிரிவுப் பிரிவாக அழைக்கப்படுவர். தங்கள் சுய விருப்பத்தின்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம். காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரத்தை சென்டாக் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைத்து அசல், நகல் சான்றிதழ்கள், புகைப்படங்கள், ரூ. 750 வரைவோலை, (எஸ்சி - பிடிக்கு ரூ. 350) "தி கன்வீனர், சென்டாக்' என்ற பெயரில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com