வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் (பொ) ப.பார்த்திபன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

புதுச்சேரி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் (பொ) ப.பார்த்திபன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1. 1. 2018 } ஐ தகுதி நாளாகக் கொண்டு புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யும் பணி அக்டோபர் 14}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் (பொ) பார்த்திபன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அதன் நகலைக் கட்சியினருக்கு வழங்கினார். காங்கிரஸ் சார்பில் பெத்தபெருமாள், திமுக தொகுதிச் செயலர் ஸ்ரீதரன், அதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலர் அந்துவான், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, புதுவை மாவட்டத்தில் மொத்தம் 7,88,719 வாக்காளர்கள் (ஆண் - 3,74,829, பெண் - 4,13,821, மூன்றாம் இனம் - 69) உள்ளனர்.
வாக்காளர்கள் தங்களின் பெயர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பார்வைக்காக வைக்கப்படும். 
அப்போது, பெயரைச் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கெனவே பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி போன்றவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் அவற்றைத் திருத்தம் செய்யவும், இடமாற்றம் உள்ளிட்ட மாற்றங்களையும் செய்யலாம். இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை www.ceopuducherry.py.gov.in என்ற இணையதளத்திலும் பார்வையிடலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com