உலக இயன் மருத்துவ தின தேசிய மாநாடு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக இயன் மருத்துவ தின தேசிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உலக இயன் மருத்துவ தின தேசிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு மருத்துவர் காளீஸ்வரன் வரவேற்றார். 'வாழ்க்கைக்குரிய உடல் செயல்பாடு' என்ற தலைப்பில் மருத்துவர் சுப்ரியா கே. வினோத் பேசினார்.
ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜே.பாலச்சந்தர் தலைமை வகித்தார். திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை. வேந்தர் கே.எம். அண்ணாமலை மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினார்.
அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு - சுகாதார ஆராய்ச்சி நிறுவன முதன்மையர் ஆர்.முரளி, ஜிப்மர் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மருத்துவர் தீப்சர்மா, புனர்வாழ்வு மருத்துவப் பிரிவு மருத்துவர் நவின் குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களது உடலின் செயல்பாடுகள், உடல் பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இன்றி உள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வைப் பெற்றால் நோயின்றி வாழமுடியும் என மருத்துவ ஆய்வுகள் கூறுவது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தேசிய அளவிளான இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் மோகனகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com