பட்டதாரிகள் வேலை தருபவர்களாக உருவாக வேண்டும்: அமைச்சர் ஷாஜகான்

பட்டதாரிகள் வேலை தேடுவோராக இல்லாமல், வேலை தருபவர்களாக உருவாக வேண்டும் என, தொழில் துறை அமைச்சர் எப்.ஷாஜகான் கூறினார்.

பட்டதாரிகள் வேலை தேடுவோராக இல்லாமல், வேலை தருபவர்களாக உருவாக வேண்டும் என, தொழில் துறை அமைச்சர் எப்.ஷாஜகான் கூறினார்.
புதுவை தொழில், வணிகத் துறை சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா காலாப்பட்டு பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவைத் தொடக்கிவைத்து அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது: இளைஞர்கள் மத்தியில் பல்வேறு திறமைகள் மண்டிக் கிடக்கின்றன. தொழில் தொடங்கி, தொழில் முனைவோராகும் திறமை உள்ளது. சொகுசான வாழ்க்கையை விட்டு விலகி, சவால்களைச் சந்தித்து தொழில் முனைவோராக உருவாக வேண்டும்.
புதுச்சேரி அரசு தொழில் முனைவோர் பிரிவு, இளைஞர்களுக்கு தேவையான உதவிகளைப் புரியத் தயாராக உள்ளது. இதற்காகப் பல்வேறு தொழில் திறன் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றார் அவர்.
சென்னை ஐஐடி பேராசிரியர் மகேஷ் பஞ்சன்குலா பேசியதாவது: புதுவை அரசுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. புதுச்சேரி தொழில் முனைவோர் மையத்துடன் இணைந்து புதுவையைச் சிறந்த தொழில்முனைவோர் முனையமாக மாற்ற உள்ளோம்.
மாணவர்களின் கனவுகள் வித்தியாசமானவையாக உள்ளன. புதுச்சேரி ஏற்கெனவே சிறந்த கல்விக்கேந்திரமாக உள்ளதால், புதுவை அரசு குறிப்பிட்ட தொழில்களைத் தேர்வு செய்து தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
தொழில் முனைவோர் மைய இயக்குநர் ராம்குமார் பேசியதாவது: முன்னோடி சேவைப் பிரிவு என்பது, கல்வி நிலையங்களில் இடையில் கல்வியை நிறுத்தியவர்களுக்கும், முறையான கல்வி பெறாதவர்களுக்கும்கூட தொழில்திறன் பயிற்சி வழங்கப்பட்டு, தொழில்முனைவோராக மாற்றும் பிரிவாகும். வாரந்தோறும் 2 மணி நேரம் இந்த முன்னோடிப் பிரிவு செயல்படும் என்றார் அவர்.
புதுச்சேரி பொறியியல் கல்லூரி முதல்வர் பி.தனஞ்செயன், டிஓய்சிஎல் நிர்வாகி சிவா மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com