ஜிப்மரில் இணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவை தொடக்கம் 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
 இது குறித்து ஜிப்மர் தொலை மருத்துவ சேவையின் இணைப்பு அதிகாரி மருத்துவர் ரவிக்குமார் சிட்டோரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
 இணையவழி கதிர்வீச்சு மருத்துவ சேவையை ஜிப்மரில் தொடங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்தச் சேவைக்குத் தேவையான ஒருங்கிணைந்த எண்ம நோய் கண்டறிதல் அமைப்பு ( இர்ப்ப்ஹக்ஷர்ழ்ஹற்ண்ஸ்ங் ஈண்ஞ்ண்ற்ஹப் ஈண்ஹஞ்ய்ர்ள்ண்ள் நஹ்ள்ற்ங்ம்) என்னும் மென்பொருளையும் இலவசமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய அரசு மருத்துவமனைகளில் ஜிப்மரில் இந்தச் சேவை முதல் முறையாக தொடங்கப்படவுள்ளது.
 இந்தச் சேவையின் வழியாக நாட்டின் எந்த ஒரு மருத்துவரும் ஜிப்மர் மருத்துவமனையின் கதிர்வீச்சு மருத்துவத் துறையுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
 தேசிய தகவலியல் மையம், மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனம், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை கூட்டாக இணைந்து இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளன. இந்த மென்பொருள் பலமுனைத் திறன் கொண்ட கருவி, மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நேரடி ஆலோசனை வழங்குவதற்கும் பயன்படும்.
 மருத்துவர்களுக்கு இடையிலான ஆலோசனை பகிர்வுக்கும், கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கும் பயன்படும் தேசிய தகவலியல் மையம் மருத்துவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளித்து இந்த மென்பொருளை பயன்பாட்டுக்கு கொண்டுவரும்.
 தற்போது ஒரு மருத்துவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com