பசுமையான புதுவைக்கான நெறிமுறை நினைவு மலர் வெளியீடு 

புதுவை மாநிலத்துக்கான விரிவான பசுமை நெறிமுறை மற்றும் நினைவு மலரை முதல்வர் வே.நாராயணசாமி சனிக்கிழமை மாலை வெளியிட்டார். 

புதுவை மாநிலத்துக்கான விரிவான பசுமை நெறிமுறை மற்றும் நினைவு மலரை முதல்வர் வே.நாராயணசாமி சனிக்கிழமை மாலை வெளியிட்டார்.
 புதுவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறை, புதுவை பல்கலைக்கழகம், ஏபிஎஸ்சிசி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு முகாமை நடத்தின.
 திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, சுற்றுப்புறச்சூழல் தினச் செய்தியை மையமாகக் கொண்டு புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் 2017 ஆகஸ்டு முதல் 2018 பிப்ரவரி வரை 30 நாள்கள் நடத்தி முடித்தன.
 இந்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள், அதிகாரிகள், வல்லுநர்களின் கருத்துக்களை மையமாக வைத்து பசுமைப் புதுவை உருவாக்கும் வகையில் "விரிவான பசுமை நெறிமுறை' உருவாக்கப்பட்டது.
 தனி மனிதனின் வாழ்வாதாரமான நிலம், நீர், காற்று, உணவு பாதுகாப்பை மையமாகக் கொண்டு இந்த விரிவான பசுமை நெறிமுறை நீர் மேலாண்மை, நிலம் மற்றும் உணவு மேலாண்மை, சுத்தமான காற்று, எரிசக்தி மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, பிற வகைகள் என்ற 7 தலைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
 பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளிகள், வீடுகள், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள், மருத்துவம் மற்றும் உணவு சார்ந்த துறைகள் இந்த பசுமை நெறிமுறையைப் பின்பற்றி புதுவையின் மாசைக் கட்டுப்படுத்தவும், சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தவும் அரசுடன் இணைந்து செயல்பட திட்டங்களை
 வழிவகுத்துக்கொள்ள வேண்டும்.
 அவ்வாறு செய்யும்போது திடக் கழிவினால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விரையமாகும் பணமும் சேமிக்கப்படும்.
 இந்த விரிவான பசுமை நெறிமுறை மற்றும் நினைவு மலர் வெளியீட்டு விழா சட்டப்பேரவை முதல்வர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
 முதல்வர் நாராயணசாமி பசுமை நெறிமுறை மற்றும் நினைவு மலரை வெளியிட, அதனை புதுச்சேரி பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங் பெற்றுக்கொண்டார்.
 நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com