ஸ்ரீமத் குரு சித்தானந்த கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம் 

புதுவை காலாப்பட்டில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயிலில் அன்னதான திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவை காலாப்பட்டில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயிலில் அன்னதான திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
 புதுவையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என ஏற்கெனவே முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, முதல்கட்டமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள மணக்குள விநாயகர் கோயில், வேதபுரீஸ்வரர் கோயில், குரு சித்தானந்தா கோயில், வில்லியனுர் திருக்காமீஸ்வரர் கோயில், காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், அம்பகரத்தூர் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் தை மாதம் முதல் வெள்ளி, சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்
 படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு அன்னதானத் திட்டத்தை கடந்த ஜன.15-ஆம் தேதி தொடக்கிவைத்தார்.
 அதன் தொடர்ச்சியாக, காலாப்பட்டு ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி தேவஸ்தானத்தில் அன்னதான கூடம் திறப்பு விழா மற்றும் அன்னதான திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கிவைத்தார். விழாவுக்கு பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்து சமய அறநிலையத் துறைச் செயலர் சுந்தரவடிவேல், ஆணையர் தில்லைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அதிகாரி மணிகண்டன் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com