ஏப். 23 முதல் 3 சுற்றுகளாக சிறப்புத் தடுப்பூசி முகாம் 

புதுவை மாநிலத்தில் சிறப்புத் தடுப்பூசி முகாம் ஏப். 23 முதல் 3 சுற்றுகளாக நடைபெறும் என்று புதுவை அரசின் நலவழி - குடும்ப நலத் துறை அறிவித்தது. 

புதுவை மாநிலத்தில் சிறப்புத் தடுப்பூசி முகாம் ஏப். 23 முதல் 3 சுற்றுகளாக நடைபெறும் என்று புதுவை அரசின் நலவழி - குடும்ப நலத் துறை அறிவித்தது.
 இதுதொடர்பாக துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் ஒருங்கிணைத்து தீவிர மிஷன் இந்திர தனுஷ் முகாம் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 மாநிலங்களில் உள்ள 21,058 கிராமங்களில் கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் மூலம் செயல்படுத்த உள்ளது. புதுவை சுகாதாரம் - குடும்ப நலத் துறை தீவிர மிஷன் இந்திர தனுஷ் முகாம் மூலம் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடத் தவறிய குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.
 அதன்படி, இந்தச் சிறப்பு முகாம் 3 சுற்றுகளாக ஏப். 23, 27 மற்றும் மே 21, 25, ஜூன் 18, 22 ஆகிய தேதிகளில் புதுவை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
 புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சமுதாய நலவழி மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்களில் இந்தச் சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தடுப்பூசி போடத் தவறிய குழந்தைகள், கர்ப்பிணிகள் தீவிர மிஷன் இந்திர தனுஷ் முகாம் மூலம் தடுப்பூசி போட்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com