ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்துக்கு இடைக்கால நிர்வாகிகள் 

புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்துக்கு இடைக்கால புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்துக்கு இடைக்கால புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
 அந்தச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. ஜிப்மர் மருத்துவமனை சமுதாய நலக் கூட்டத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் அமைப்புச் செயலர் மாசிலாமணி வரவேற்றார். தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் தமிழ்வாணன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். பொதுச் செயலர் ஸ்ரீகாந்த் தீர்மானங்களை நிறைவேற்றினார்.
 கூட்டத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ள தொழில் சங்கத் தேர்தலுக்கு 7 பேர் கொண்ட குழுவை அமைப்பது, தேர்தல் வரை பொதுப் பேரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய இடைக்கால நிர்வாகக் குழு செயலாற்ற ஒப்புதல் அளிப்பது, காலியாக உள்ள அனைத்து "பி' - "சி' பிரிவு பணியிடங்களைத் தகுதி வாய்ந்த நிரந்தர ஜிப்மர் ஊழியர்களைக் கொண்டு நிரப்பிட நிர்வாகத்தை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 பொதுப் பேரவைக் கூட்ட ஒப்புதலின்படி, தேர்தல் வரை புதிய இடைக்கால நிர்வாகத் தலைவராக தமிழ்வாணன், துணைத் தலைவராக சத்தியமூர்த்தி, பொருளாளராக மாசிலாமணி, இணைச் செயலராக செல்வமணி, அமைப்புச் செயலராக இளங்கதிர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com