பல்கலை.யில் புதிய துணை மின் நிலையம் திறப்பு 

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
 புதுவைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 85 லட்சம் செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக அரவிந்தர் மாணவர் விடுதி வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 500 கிலோ வாட் திறன் கொண்ட துணைமின் நிலையத்தைத் தொடக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
 இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தும் புதுவைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர். இந்த நிலையில், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத்தின் கட்டுமானங்களின் தரத்தை மேம்படுத்தவும், அதிகரிக்கவும் நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படையில், தற்போது, 500 கிலோ வாட் திறன் கொண்ட புதிய துணைமின் நிலையம் நிறுவப்பட்டது. இதன் மூலம், இனி பல்கலைக்கழக வளாகத்தில் மின் பற்றாக் குறை இருக்காது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதிக் காரணமாக, ஆய்வுத் துறை மாணவர்கள் கூடுதலாக ஆய்வுக் கூடங்களில் ஆய்வுகளைத் தொடரவும் வசதி ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் சூரிய ஒளி சக்தி மூலம் மின் சாரத்தை உருவாக்கும் திட்டமும் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) தரணிக்கரசு, பல்கலை. பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com